Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீதான தகவல் கொடுக்க…. தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. வேலூரில் பரபரப்பு….!!

சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிலாளியின் வீடு புகுந்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுப்பதாக கூறி அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டத்தில் உள்ள குருமலை, நச்சிமேடு போன்ற மலைக்கிராமங்களில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவருகின்றது. இவ்வாறு சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையின் ரகசிய தகவலின்படி சாராய கும்பலின் மறைவிடங்களை கண்டுபிடித்து காய்ச்சலுக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், ஊறல் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியான சசிகுமார் என்பவர்தான் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுப்பதாக சாராய கும்பலை சேர்ந்தவர்கள் கருதி அவரது வீட்டிற்கு புகுந்துள்ளனர்.

இந்நிலையில் சசிக்குமாரை சாராய கும்பலை சார்ந்த 3 பேர் சேர்ந்து காவல்துறையினருக்கு தங்களை பற்றி ரகசிய தகவல் அளிப்பதாக கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைக் கண்டு சசிகுமார் மனைவி தடுக்க முயன்றபோது இருவரையும் சாராய கும்பல் ஆபாசமாக பேசி துப்பாக்கியால் சுட்டு விடுவதாக கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இதனைத்தொடர்ந்து காயமடைந்த சசிகுமாரை அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சுபா, சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தாக்குதலை நடத்தியவர்கள் குரு மலையைச் சேர்ந்த ராம்குமார், ராஜா, குமார் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் 3 பேரும் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |