பிரான்சில் தன் காதலியின் மகளை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையையும் சீரழிக்க நினைத்த கொடூரனை கொன்ற பயங்கர வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
பிரான்சில் Valérie Bacot என்ற பெண் 12 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது தாயின் காதலன் Polette என்பவரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். Valérie Bacot- ன் தாய் குடி போதைக்கு அடிமையானதால் அவர் தன் மகளை பாதுகாக்கவில்லை. இதனால் அதிக கொடுமைகளை அனுபவித்து வந்த Valérie கர்ப்பமடைந்து விட்டார்.
இதைத்தட்டிக் கேட்க யாரும் இல்லை. எனவே Valérie Bacotயை கட்டாய திருமணம் செய்த, அந்த கொடூரன், பல பேருக்கு இரையாக்கி, பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன் பின்பு Valérieக்கு பிறந்த பெண் குழந்தை பெரியவளான பின்பு அந்த சிறுமியையும் சீரழிக்க தீர்மானித்த Polette யை Valérie துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டார்.
இந்த வழக்கு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. எனவே சுமார் 5 லட்சம் மக்கள் Valérie க்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.