இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எழுந்துள்ள நிலையில் இந்த வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டாலும் ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.