டயானா திட்டமிட்டபடி பிரான்சிலிருந்து கிளம்பியிருந்தால் அவர் தற்போது உயிருடன் இருந்திருப்பார் என்று இளவரசியின் முன்னாள் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டயானாவும், அவருடைய காதலுனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து டயானா ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிளிருந்து லண்டனிற்கு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே டயானா கண்ணிவெடிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் அவர் முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் கண்ணிவெடிகள் குறித்த பிரச்சினைகளுக்கு எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தற்போதுயிருக்கும் லேபர் அரசாங்கம் கண்ணிவெடி குறித்த பிரச்சினைகளுக்கு உகந்த தீர்வு எடுக்கும் என்று நம்புகிறேன் என்றும் டயானா கூறியுள்ளார். இவருடைய இந்த கூற்றைக் கேட்ட கன்சர்வேடிவ் கட்சியினர் டயானாவின் மீது கடுங்கோபத்தில் இருந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து டயானா பிரான்ஸ் நாட்டிலிருந்து லண்டனிற்கு திரும்பி வந்தவுடன் சண்டையிடுவதற்காக கன்சர்வேடிவ் கட்சியினர்கள் காத்திருந்துள்ளார்கள்.
இது குறித்து தகவலறிந்த அவர் பிரான்சிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டன் திரும்புவதற்காக வைத்திருந்த தன்னுடைய திட்டத்தை கைவிட்டுள்ளார். ஆனால் டயானா திட்டமிட்டிருந்த படி ஆகஸ்ட் 28ஆம் தேதியே லண்டனுக்கு கிளம்பியிருந்தால் பிரான்சில் நடந்த கார் விபத்தில் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்று இளவரசியின் முன்னாள் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.