Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கருடன் மீண்டும் இணையும் அனிருத்?… வெளியான புதிய தகவல்…!!!

ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் தெலுங்கு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது அனிருத் டான், காத்துவாக்குல ரெண்டு காதல், தளபதி 65 உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .

Anirudh comes onboard for Mega hero's next

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஷங்கர், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |