Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்க வேண்டும்… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… பல முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்தும், அதை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் கட்சியினர் பல முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் கிளை செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் காஜா நஜிமுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், மாவட்ட தலைவர் குருசாமி, உதயகுமார், ராமச்சந்திரன், தீனதயாளன், சித்திரவேல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |