Categories
தேசிய செய்திகள்

வயிறு வலின்னு வந்த பெண்ணிடம்…. சில்மிசம் செய்த ஊழியர்… நள்ளிரவில் மருத்துவமனையில் நேர்ந்த கொடுமை…!!!

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்பட்டுள்ளதால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொண்டு மாத்திரைகளை வாங்கி சென்று சென்றுள்ளார். இதையடுத்து கடந்த வாரம் வயிற்று வலி மிகவும் அதிகமான காரணத்தினால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அவரை அட்மிட் செய்தனர். பின்னர் வயிறுவலி சரியாவதற்கு மருந்துகளை கொடுத்து அந்தச் பெண்ணை தூங்க வைத்துள்ளனர்.

இதை நோட்டமிட்ட அந்த மருத்துவமனை ஊழியர் இரவு அந்த பெண் தூங்கிக் கொண்டிருக்கும்போது வார்டுக்குள் நுழைந்து விளக்கை அணைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் தூக்கத்தில் இருந்து எழுந்து அந்த பெண் கத்தி கூச்சலிடவே, அந்த ஊழியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பிறகு அந்தப் பெண் தனது குடும்பத்தாரிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |