நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதுச்சேரியில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் மேலும் சில தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும், மதுபான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 வரையிலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.