Categories
உலக செய்திகள்

பல வருஷமா இது தான் நடக்குது..! ஏமனில் திடீர் பயங்கரம்… வீரர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

ஏமனில் ஆளில்லா விமானம் மூலம் இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே ஏமனில் பல வருடங்களாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ஏமன் ராணுவத்தில் புதிதாக சேரும் வீரர்களுக்கு சவுதி கூட்டுப்படைகளின் ராணுவ வீரர்கள் ஏமனில் முகாமிட்டு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஹட்ரமவுட் மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சவுதி கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த ராணுவ தளத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்றுமுன்தினம் ஆளில்லா விமானத்தை கொண்டு திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஏமன் ராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். அதோடு மட்டுமல்லாமல் 10 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |