ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊர் ஜாமத் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அடுத்துள்ள கொட்டியக்காரன்வலசை கிராமத்தில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அஸ்மத் உசேன்(39). இந்நிலையில் கொட்டியக்கரான்வலசை கிராமத்தில் ஜமாத் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அஸ்மத் உசேனுக்கும் அங்கிருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சீனிஅஸ்கர்(20), இஸ்மத்துல்லா(23) ஆகியோர் அஸ்மத்தை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அஸ்மத் உசேனின் தந்தை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சீனிஅஸ்கர், இஸ்மத்துல்லா ஆகிய 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.