வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா வனப்பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்சணாமூர்த்தி என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு கிடந்த மாங்கொட்டையை மாடு கடித்ததில் அதில் இருந்தகுண்டு வெடித்து மாட்டின் தாடை தொங்கி படுகாயம் ஏற்பட்டது. எனவே மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு மாங்கொட்டையின் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் தட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின்படி உமராபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதில் நாட்டு வெடிகுண்டை மாங்கொட்டையில் மறைத்து வைத்ததாக அந்த பகுதியை சேர்ந்த மாங்காய் தோப்பில் காவலாளியாக பணிபுரியும் குப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.