Categories
உலக செய்திகள்

இங்க பாதிப்பு அதிகமா இருக்கு..! தடையை நீட்டித்த பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி வரை இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க போவதாக பெரு நாடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் 17.91 கோடிக்கும் அதிகமானோர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 38.80 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது தென் ஆப்பிரிக்கா கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்துள்ள பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு ஜூலை 11-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடையை தற்போது நீட்டித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |