அரசுப்பள்ளி ஆசிரியரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் மயில்வாகனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மயில்வாகனன் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த மயில்வாகனன் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு பவுன் தங்க நகை போன்றவை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் மயில்வாகனன் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.