Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரிந்த உடன்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவர் கண்டித்ததால் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தம்மாவுக்கு, அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த உடன் சுரேஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தமா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |