மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் தனது உறவினரான பேச்சியம்மாள் என்ற மூதாட்டி உடன் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் சாலைப்புதூர் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டியான பேச்சியம்மாள் தவறி கீழே விழுந்து விட்டார்.
அதன் பின் அருகில் உள்ளவர்கள் மூதாட்டியை மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.