ஜூன் 17ஆம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பரவி வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொ ற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகின்றது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி குறித்த விவரங்களை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
அதன்படி ஜூன் 17ஆம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து 1,18,17,690 தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, 1,12,88,648 பேருக்கு தடுப்பூசி செலுத்து பட்டுள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் 66000 படுக்கைகள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.