விருச்சிகம் ராசி அன்பர்களே.! மன அமைதி கிடைக்கும்.
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி இருக்கும். அமைதிக்கும் உற்சாகத்திற்கும் குறைவிருக்காது. மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் சிறப்பாக காரியத்தை செய்து முடிக்க முடியும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி செல்லும். வருமானத்தை உயர்த்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் நிம்மதி கூடும். குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு கூடும்.
பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையாக இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். கல்வியில் வெற்றி கிடைக்கும். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்