மகரம் ராசி அன்பர்களே.! வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
இன்று வெளியூர் வெளிநாடு செல்லக் கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும் மற்றும் நல்ல செய்திகளை கேட்டுக் கொள்ள முடியும். ஆனால் அதனுடைய பலன்களை அடைவதில் சிக்கல்கள் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது கவனம் தேவை. சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பின்னர் சரியாகும். வருமானம் வந்தால் அந்த வேலையை எடுத்து செய்ய வேண்டும்.
வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தெளிவுபடுத்திக் கொண்டு எதையும் பேச வேண்டும். பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். காதல் கசக்கும். மன அழுத்தத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி பற்றிய அக்கரை ஏற்படும். கல்வியில் சாதிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஊதா