தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி, மெட்ரோ வசதி அனைத்திற்கும் அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதில் பேருந்து, ஆட்டோ , சென்னை மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கிட்டதட்ட 40 நாட்களுக்கு பின் சென்னை மெட்ரோ சேவை இன்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான சேவையில் முறையே 1,2 மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். விம்கோ நகர்- விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்- விமான நிலையம், சென்ட்ரல்- பரங்கிமலை தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.