தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் சிறப்பாக செயல்பட உறுப்பினர்கள் அதிக அளவில் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும் வகையில் ஐந்து ஆண்டு நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.