Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொடுவா மீசையுடன் தோனி…. வைரலாகி வரும் புகைப்படம்….!!!!

சில விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள், சிலர் மீது பாசம் காட்டுகிறார்கள். சிலரையோ தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதத் தொடங்குகிறார்கள். அப்படி ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராகிவிட்டவர்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி.

தற்போது எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜீவா ஆகியோருடன் தனக்கு கிடைத்துள்ள நேரத்தை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் செலவழித்து வருகிறார். இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சிம்லாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் விசுவாசம் படத்தில் கொடுவா மீசையுடன் வரும் அஜித் போல, சிஎஸ்கே கேப்டன் தோனியும் கொடுவா மீசையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிரித்த முகத்துடன் தோனி கம்பீரமான தோற்றத்துடன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Categories

Tech |