Categories
மாநில செய்திகள்

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு….!!!!

தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். அவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை வழங்கும் மாடி தோட்ட கிட்டில், 2 கிலோ எடையுள்ள காயர் பித் கட்டிகள் கொண்ட 6 குரோ பேக், 6 பாக்கெட் காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பயோ கண்ட்ரோல் ஏஜே நெட், 100 மிலி வேப்பெண்ணை மருந்து இருக்கும். இதன் விலை 850 ரூபாய், அரசு ரூ.340 மானியமாக வழங்குவதால், ரூ.510 செலுத்தினால் போதும். மேலும் சொட்டுநீர் குழாய் அமைப்புகளும் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கிக்கணக்கு விபரம் மகள் ஆகியவற்றுடன் தோட்டக்கலை அலுவலகத்தில் சென்று பதிவு செய்தல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |