நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் ரேஷ்மா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்திக் உடன் கிழக்கு மூலம், களஞ்சியம் இயக்கிய பூமணி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார் இவர். இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார்.ஆனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.