சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை செய்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.