பிக்பாஸ் பிரபலம் கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜய்க்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது .
Birthday varuthu, aanaa vayase aava maatenthu.🤩🤩
Happy birthday @actorvijay https://t.co/Mk9iFI4ESH— Kasturi (@KasthuriShankar) June 21, 2021
தற்போது இந்த இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டேங்குது’ என பதிவிட்டு நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .