அமெரிக்காவில் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன் எனும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன் எனும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்தது என்னும் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதாவது அந்த குழந்தையின் தாயாருக்கு கர்ப்ப காலத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிச்சர்ட் பிரசவத்திற்கு 131 நாட்களுக்கு முன்பாகவே பிறந்துள்ளான். அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தை 330 கிராம் எடை மட்டுமே இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
ஆனால் அந்த குழந்தை மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர்பிழைத்து ஆறு மாதங்களுக்கு பிறகு கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் ரிச்சர்ட்டின் முதல் பிறந்தநாள் கடந்த 5-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டபோது ரிச்சர்ட் பிறந்த நாள் கேக்கை சாப்பிடும் புகைப்பட காட்சி அனைவரையும் வெகுவாக கவரப்பட்டது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர் பிழைத்த அதிசய குழந்தையாகவே ரிச்சர்ட் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறான்.