Categories
உலக செய்திகள்

தந்தையின் கடையில் பணம் எடுத்த மகள்.. மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கொடூர கணவர்..!!

பாகிஸ்தானில் ஒரு நபர் தன் மனைவியை கொன்று உடலை துண்டாக்கி தீயில் எரித்து கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் Cheela Wahan என்ற பகுதியை சேர்ந்த தம்பதி Muhammad Sharif மற்றும் Ishrat. அந்த பகுதியில் Sharif ஒரு கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் மகள் Halima Sadia ஏதோ வாங்குவதற்காக கடையிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்.

ஆனால் அதனை தந்தையிடம் கூறாததால், கணவன் மனைவிக்கு இடையில் கடந்த 14ஆம் தேதியன்று சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த Sharif தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதன் பின்பு உடலை கோடாரியை வைத்து வெட்டி துண்டாக்கி தீ வைத்து எரித்து கால்வாயில் வீசியிருக்கிறார்.

அதற்கு முன்பு தன் குழந்தைகள் மூன்றையும் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று கூறி அவரது தாய் வீட்டில் விட்டுள்ளார். எனினும் Ishrat கதறும் சத்தம் கேட்டதும் அருகில் உள்ளவர்கள் பதறியடித்து வந்துள்ளனர். ஆனால் Sharif எங்கள் குடும்ப பிரச்சினையில் யாரும் தலையிட கூடாது என்று திட்டி அனுப்பியிருக்கிறார் .

எனவே அருகில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து Ishrat-ன் தந்தையிடம் தெரிவித்துள்ளார்கள். அதன் பின்பு உண்மை தெரியவந்தவுடன் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |