Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அப்பா கழிவறைக்கு கூட்டிட்டு போனாரு” கேட்டதும் அதிர்ச்சியடைந்த தாயார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கும் கணவனைப் பிரிந்து வாழ்ந்த 32 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிரகாஷ் திருச்செந்தூரில் வைத்து அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் பிறந்த 10 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒன்டிபுதூர் பகுதியில் பிரகாஷ் வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த 10 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் உன்னையும், உனது தங்கை மற்றும் அம்மாவை கொலை செய்து விடுவேன் என அந்த சிறுமியை பிரகாஷ் மிரட்டியதால் அச்சத்தில் அந்த சிறுமி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தனது மனைவியை இறைச்சி வாங்குவதற்காக வெளியே அனுப்பிவிட்டு பிரகாஷ் அந்த 10 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பின் பிரகாஷ் தனது அக்காவை கழிவறைக்கு அழைத்து சென்றதை பார்த்த 8 வயது சிறுமி தனது தாயிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதன்பின் தனது மூத்த மகளிடம் கேட்ட போது நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |