மர்ம நபர்கள் தி.மு.க பிரமுகரின் வீட்டில் பீர் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லிங்கம் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க-வில் இணைந்து கட்சி பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லிங்கம் வீட்டின் வெளிப்புற கதவு அருகே அதிகாலை 2 மணி அளவில் பயங்கரமாக சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லிங்கம் வெளியே சென்று பார்த்த போது 3 பீர் பாட்டில்களை வீசி விட்டு சில மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து லிங்கம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.