Categories
தேசிய செய்திகள்

அதிக குழந்தைகளை பெற்றால்…. ரூ.1 லட்சம் பரிசு – அரசு தடாலடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 150 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருப்பதன் காரணமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதில் சில ஜாதி, இன அமைப்புகள் தங்கள் சமூகத்தினர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதும் நடந்து வருகிறது.

அந்த வகையில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த மிஸோ என்ற ஒரு அமைப்பு தங்களுடைய மக்கள் அதிகளவில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தன்னுடைய தொகுதியில் அதிக குழந்தைகளைப் பெற்று வாழும் பெற்றோருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவ்யா அறிவித்துள்ளார். மிஸோ இன மக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |