Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெப் தொடராக உருவாகும் பாகுபலி… நடிக்க மறுத்த பிரபல நடிகை…!!!

பாகுபலி கதை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெப் தொடராக உருவாக இருக்கிறது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக இருக்கிறது. மேலும் பாகுபலி கதையில் வரும்  ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளவயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்படவுள்ளது .

Samantha refuses to star in Netflix's Baahubali series! | TeluguBulletin.com

இந்நிலையில் இளம் வயது சிவகாமியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் பாகுபலி வெப் தொடரில் நடிக்க அவரை அணுகியுள்ளனர். ஆனால் இந்த வெப் தொடரில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |