Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாப்பிடுவதற்கே வழி இல்லை… எங்களுக்கு இதை பண்ணி கொடுங்க… திருநங்கைகளின் கோரிக்கை…!!

திருநங்கைகள் இணைந்து மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 150 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் படித்து இருந்தும் வேலை இல்லாததால் பிச்சை எடுக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகள் இணைந்து பன்னீர் செல்வியின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் பிச்சை எடுத்து வரும் வருமானத்தில் எங்களால் சாப்பிட முடியாமலும், வீட்டு வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளனர். ஆகவே தாங்கள் வசிப்பதற்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி  தர வேண்டும் எனவும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும் திருநங்கைகள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |