மன உளைச்சலில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெஸ்லின் என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல்நலகுறைவால் அவதிப்பட்டு வந்த பீட்டர் கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகு தற்போது மீண்டும் பீட்டருக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை நினைத்து மன அழுத்தத்தில் இருந்த பீட்டர் வீட்டு மாடியில் திடிரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பீட்டரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த புளியங்குடி காவல்துறையினர் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.