யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து அணி மாசிடோனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘சி ‘பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – வடக்கு மாசிடோனியா மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே நெதர்லாந்து அணி அதிரடி காட்டியது . நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் 24 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க மற்றொரு வீரரான ஜார்ஜினியோ 51 மற்றும் 58 வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இறுதியாக நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் மாசிடோனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 3 வது வெற்றியை பதிவு செய்தது. இதேபோல் புச்சாரெஸ்டில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ‘சி ‘ பிரிவு லீக் ஆட்டத்தில் உக்ரைன்-ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன.
இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இறுதியாக ஆஸ்திரேலிய அணி உக்ரைனை வீழ்த்தி 1-0 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ‘சி’ பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 வெற்றியுடன் 9 புள்ளிகளை பெற்று முதலிடமும், ஆஸ்திரியா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தையும் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது . உக்ரைன் அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்புக்காக காத்திருக்கிறது. இதில் 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த வடக்கு மாசிடோனியா அணி வெளியேறியது.