தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் நேற்றுமுன்தினம் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை உடைத்து சமையலறைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உப்பு மிகுந்த தின்பண்டங்களை சாப்பிட்டுள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விடுதி உரிமையாளரிடம் உப்பு மிகுந்த தின்பண்டங்களை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் காட்டு யானைகளுக்கு உப்பு மிகுந்த உணவுகள் மழைக்காலத்தின் போது கிடைக்காத காரணத்தினால் அவை கிராமங்களை நோக்கி படையெடுத்து வருவதாக வனவிலங்குகள் துறை வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.