கம்ப்யூட்டரில் தரவுகளை தட்டச்சு செய்வதில் இதுவரை 9 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த வினோத்குமார்.
புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் வினோத் குமார் சவுத்ரி. தனது கம்ப்யூட்டரில் தரவுகளை விரைவாக தட்டச்சு செய்வதில் பல சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை அவர் ஒன்பது சாதனைகளை படைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு கம்ப்யூட்டரில் மூக்கினால் தட்டச்சு செய்வது, கண்களை கட்டிக்கொண்டு தட்டச்சு செய்வது, வாயில் குச்சியை வைத்து தட்டச்சு செய்வது போன்ற எல்லாவற்றிலும் வேகமாக செய்துகாட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “எனக்கு வேகமாக செய்வது என்றால் மிகவும் பிரியம். குழந்தையாக இருக்கும்போதே மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன். எனக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருந்தது. பின்னர் எனக்கு சிறிது உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் எனக்கு விளையாட்டை தொடர முடியவில்லை. அதன்பின் கம்ப்யூட்டரில் வேகம் காட்ட ஆரம்பித்தேன். 2014இல் எனது மூக்கினால் 103 எழுத்துக்களை 46. 30 வினாடிகளில் தட்டச்சு செய்தேன்.
அதை எடுத்து கண்களை கட்டிக் கொண்டு மிக வேகமாக அனைத்து எழுத்துக்களையும் 6.21 வினாடிகளில் தட்டச்சு செய்தேன். 2017ஆம் ஆண்டு தன் வாயில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அதன் மூலம் அனைத்து எழுத்துக்களையும் மிக வேகமாக தட்டச்சு செய்து சாதனை செய்தேன். பின்னர் ஆதி சாதனையை 17.1 வினாடிகளில் தட்டச்சு செய்தேன். தற்போது ஒரு டென்னிஸ் பந்தை ஒரு நிமிடத்தில் 205 முறை கைகளால் தொட்டு புதிய சாதனையை படித்திருக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.