திருமணமான ஒரு வருடத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கும், பெண் மருத்துவர் விஸ்மியா நாயர் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 100 சவரன் நகையும், ஒரு ஏக்கர் நிலமும், ஒரு டொயோட்டா கார் வழங்கப்பட்டது. இத்தனை கொடுத்தும் மேலும் வரதட்சணை வேண்டும் என்று கூறி கிரண்குமார் அடிக்கடி விஸ்மியாவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் விஸ்மியா கணவருடன் சண்டை போட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கு சென்று அவரை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பிறகு காரை விற்கப் போவதாக விஸ்மியைவிடம் கூறியுள்ளார். அதை அவர் தடுத்து நிறுத்தவே, காரை விற்காமல் இருக்க வேண்டுமென்றால் கூடுதலாக பணம் வாங்கிக் கொண்டு வா என்று மீண்டும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதை அவரது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்களும் சமாதானம் செய்துள்ளனர்.
பின்னர் இது நடந்து பத்து நாட்களில் விஸ்மியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வந்தது. தற்கொலைக்கு கணவன் கிரன் குமார் தான் காரணம் என்று அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் கூறியுள்ளனர். மேலும் அது சம்பந்தமாக விஸ்மியா அவரது பெற்றோருக்கு அனுப்பிய போட்டோ மற்றும் வாட்ஸ் அப் ஷாட் களையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவற்றை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.