தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்துவிடுவேன் என்று ஆசிரியர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாணவி தந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Categories