விசாரணைக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை கொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 40 வயதான மரியம்மா என்பவர் அதே பகுதியில் பாதிரியார் பால சாமியின் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். ஜூன் 15ஆம் தேதி பாதிரியார் பாலசாமி காவல் நிலையத்திற்கு சென்று அவரது வீட்டில் இரண்டு லட்சம் பணம் காணவில்லை என்றும், அதை மரியம்மாள் தான் திருடி விட்டதாக கூறி புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் அவரை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்துள்ளார்.
மேலும் அவரை உடல்ரீதியாக தாக்கியுள்ளார். இதனால் அவர் காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உயர் அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், அங்கிருந்த போலீசார் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் போலீஸ் கமிஷனர் அந்த காவல் நிலையத்தில் இருந்த மூன்று காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.