நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசி ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பு குறித்து தவறான எண்ணம் மக்களிடம் உள்ளதால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தும் வகையில் புதிய அனிமேஷன் டூடுலை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.