மகாராஷ்டிர மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் யோகி ஹீல்ஸ் உள்ள கிரவுன் ஜூவல் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தஸ்ரத் குன்வந் ராவ். இவருக்கு ஒரு மனைவியும், 35 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளார். அவருக்கு 67 வயதான காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை சரியாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் ஒரு மயக்க மருந்தை கலந்து ஐஸ் கிரீம் ஒன்றை மகனுக்கும், மனைவிக்கும் வாங்கி கொடுத்துள்ளார். இதை சாப்பிட்டு இருவரும் மயங்கிய பிறகு, மகனை தண்ணீர் தொட்டிக்குள் வைத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மயக்கம் தெளிந்து மனைவி எழுந்து பார்க்கும்போது மகனும், கணவளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முதியவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அதில் தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தன்னால் கவனிக்க முடியாததால் தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.