டெல்லியில் மெட்ரோ ரயிலில் கடும் பாதுகாப்புகளை மீறி குரங்கு உள்ளே நுழைந்து பயணம் செய்த சம்பவம் பெரும் வைரலானது.
நாட்டில் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவைகளில், டெல்லி மெட்ரோ ரயிலும் அடங்கும். அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாவதும் உண்டு. இத்தகைய சூழலில் டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணித்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தா வழித்தடத்தில் குரங்கு பயணம் செய்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த குரங்கு சகபயணிகள் எந்த தொல்லையும் தரவில்லை.
குரங்கு பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடர்ந்து, இதுபற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அக்சர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலுக்கு குரங்கு நுழைந்தது பற்றி தெரிவிக்கப்பட்டதும், அடுத்த ரயில் நிலையத்தில் குரங்கு வெளியேற்றப்பட்டது. இருப்பினும் குரங்கு போன்ற விலங்குகளுக்கு மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் உணவு அளிப்பது போன்ற எதையும் செய்ய வேண்டாம் எனவும், அது சில வேளைகளில் ரயில் பணிகளுக்கு ஆபத்தாக அமையும் எனவும் எச்சரித்துள்ளது.