நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவாக்சின் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்த சென்னையில் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 2 நாட்களுக்கு சிறப்பு முகாமை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுவரை 59 ஆயிரம் பேர் காலம் கடந்தும் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.