மெக்ஸிகோவின் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 நபர்கள் பலியானதால் தீவிர விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
மெக்சிகோவில் உள்ள ரெய்னோசா என்ற நகரத்தில் ஒரு கும்பல் காரில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைப் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அந்த பயங்கரவாத கும்பலை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 2 வருடங்களாக அதிகமான கொலை நடந்து வருகிறது. மேலும் கடந்த 2019 ஆம் வருடத்தில் 34,681 கொலை வழக்குகளும், கடந்த 2020 ஆம் வருடத்தில் 34 ,554 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆயுதங்கள், போதை பொருட்கள் மற்றும் மனிதர்களை கடத்தும் வழக்குகளும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மெக்ஸிகோவின் ஜனாதிபதியான ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், எல்லை பகுதியில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.