விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது .
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
Too little.
I’ll do more in the theaters. pic.twitter.com/AOoRYwmFRw— Vijay Deverakonda (@TheDeverakonda) June 21, 2021
இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து நடிகர் விஜய் தேவர்கொண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘லிகர் படத்தின் ஓடிடி மற்றும் அனைத்து மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து ரூ.200 கோடி பெற்றுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டரை பகிர்ந்து ‘இது மிகவும் சிறியது. நான் தியேட்டரில் இதைவிட அதிகமாக பார்த்துவிடுவேன்’ என கலாய்த்து பதிவிட்டுள்ளார்.