கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் மகனை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில், பாருராஜ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயதான தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 வயது சிறுவன் நீரஜ் குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பண்டிட் என்ற நபருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அந்த 10 வயது சிறுவனுக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் அந்த சிறுவன் வெளியில் விளையாட சென்று வீட்டிற்கு திரும்பும் போது வீட்டினுள் அந்த நபர் தனது அம்மாவுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரை நீரஜ் குமார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பண்டிட் சிறுவனை அடித்து உதைத்து கொலை செய்துவிட்டு அவரது உடலை கால்வாயில் வீசி விட்டு சென்றுள்ளார். மறுநாள் அந்த மகனின் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் பிணத்தை மீட்டு விசாரணை செய்ததில், கொலை செய்தது பண்டிட் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.