நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். பரவலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். வெளியே சென்றால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.