Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! விட்டுக்கொடுக்க வேண்டும்….! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

இன்று அரசு வழியில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய நல்ல செய்திகள் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அந்தஸ்து கூடும். குடும்பத்திலிருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக அமைகின்றது. விட்டுக்கொடுத்து செல்வது எப்பொழுதும் நல்லது. புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் முன்னேற்றத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொலைபேசி மூலம் வரும் தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வசீகரமான தோற்றம் இருக்கின்றது. பேச்சில் அன்பை வெளிப்படுத்துங்கள். முன்கோபங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை.

தொழிலுக்காக கடன் வாங்க வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை அவசியம்.  மாணவர்களுக்கு கல்வியில் விருப்பம் உண்டாகும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கசப்பாக இருந்தாலும் மாலை நேரத்திற்குள் எல்லாம் சரியாகி கைகூடி விடும். மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் மென்மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 5                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |