Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதோட மதிப்பு 2 கோடி ரூபாய்… அரிய வகை மெழுகு போன்ற பொருள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

2 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் உமிழ கூடிய மெழுகு போன்ற பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது ஒரு பையில் மெழுகு போன்ற பொருள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மெழுகு போன்ற பொருள் திமிங்கலம் வாயிலிருந்து உமிழ கூடிய அம்பர்கீரிஸ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதன் மூலம் வாசனை திரவியங்கள் தயாரிக்க முடியும். இந்த அரிய வகை மெழுகு போன்ற பொருள் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் 2 கோடி ரூபாய் மதிப்புடையது.

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார், ஜான், முகமது, ராஜா, இளங்கோவன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்ததோடு, திமிங்கலம் வாயிலிருந்து உமிழ கூடிய அந்த மெழுகு போன்ற பொருளை பறிமுதல் செய்து எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |