Categories
மாநில செய்திகள்

உதவித்தொகை விண்ணப்பிக்க கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவலுக்கு www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தை பார்க்கவும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31.

Categories

Tech |